ETV Bharat / state

வெயிலால் உயிரிழந்த ஐவரின் உடல்கள் கோவைக்கு வந்தன

author img

By

Published : Jun 13, 2019, 12:03 PM IST

கோவை: உத்திரப்பிரதேசத்தில் வெயிலால் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் ரயில், விமானம் ஆகியவை மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டன.

File pic

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் உத்திர பிரதேச மாநிலம் காசிக்கு ரயிலில் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் காசிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கோவைக்கு கேரள விரைவு ரயிலில் திரும்பினார். அப்போது அங்கு நிலவிய கடும் வெயிலால் 5 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையா, பாலகிருஷ்ணன், பச்சையப்பா கவுடர், கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கலாதேவி, தெய்வானை என்பது தெரியவந்தது. இதையடுத்து ஐந்து பேரின் உடல்களும் கோவைக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பச்சையா கவுடர், தெய்வானை ஆகியோரின் உடல்கள் ரயில் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மீதமுள்ள 3 பேரின் உடல்கள் டெல்லியில் இருந்து கோவைக்கு விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மூன்று பேரின் உடல் அழுகி துர்நாற்றம் வீசியதால் விமானத்தில் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

உயிரிழந்தவரின் உடல்

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் நேற்று (ஜூன் 12) நள்ளிரவில் மூன்று பேரின் உடல்களும் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதேபோல திருவனந்தபுரம் விரைவு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட இருவரின் உடல்கள் இன்று (ஜூன் 13) காலை கோவை வந்தடைந்தன. இதையடுத்து 5 பேரின் உடல்களும் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டன.

சு.சீனிவாசன்.       கோவை

உத்திரப்பிரதேசத்தில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் ரயில் மற்றும் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது.

கோவை, நீலகிரி பகுதியை சேர்ந்தவர்கள் உத்திர பிரதேச மாநிலம் காசிக்கு ரயிலில் ஆன்மிகா சுற்றுலா சென்றுள்ளார். காசிக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது, அங்கு நிலவிய கடும் வெயிலால் 5 பேர் உயிரிழந்தனர். அவர்கள் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா, பாலகிருஷ்ணன், பச்சையப்பா கவுடர் மற்றும் கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த கலாதேவி, தெய்வாணை என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரின் உடல்களும் கோவைக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பச்சையா கவுடர் மற்றும் தெய்வாணை ஆகியோரின் உடல்கள் ரயில் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 3 பேரின் உடல்கள் டெல்லியில் இருந்து விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. விமானத்தில் வர வேண்டிய 3 பேரின் உடல்கள் அழுகி தூர்நாற்றம் வீசியதாக கூறி, விமானத்தில் இருந்து இறக்கப்பட்டது. இதனால் 3 பேரின் உடல்களும் கோவைக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நேற்று மாலையே வர வேண்டிய உடல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, நேற்றிரவு 3 பேரின் உடல்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. நள்ளிரவில் 3 பேரின் உடல்களும் கோவை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட இருவரின் உடல்கள் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் இன்று காலை கோவை வந்தடைந்தது. இதையடுத்து 5 பேரின் உடல்களும் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

Video in ftp

TN_CBE_2_13_BODY ARRIVED_VISU_9020856
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.