கோயம்புத்தூர் முத்தண்ணன் குளம் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் தொடங்கியதால் அங்குள்ள குடியிருப்புகளை அகற்றும் பணிகள் இன்றுடன் முடிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து அந்தக் குளத்தில் மீன் பிடிக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.
இதனைக் கண்டித்த கோயம்புத்தூர் வட்ட மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தினர் மீன்பிடி வலைகளுடன் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், மீன்கள் பிடிப்பதற்குத் தடை விதிக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைத்தனர்.
பின்னர், அங்கு வந்த கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: நடுக்குப்பம் மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம்!