ETV Bharat / state

திருச்சி என்.ஐ.டி.யில் இடம் பிடித்த முதல் பழங்குடி மாணவி

கோவை: முதல் முறையாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஜே.இ.இ தேர்வு மூலம் வெற்றி பெற்று திருச்சி என்.ஐ.டி.யில் இணைந்துள்ளார்.

sabitha first tribe girl
author img

By

Published : Jul 29, 2019, 7:38 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு அருகே காளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் கூலித்தொழில் செய்துவருகிறார். இவருக்கு வினிதா,கவிதா,சபிதா ஆகிய மூன்று மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் மூன்றாவது மகளான சபிதா தனது கிராமத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியங்காடு அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்தார்.

மருத்துவப்படிப்பு படிக்க வேண்டும் என்று நீட் தேர்வு எழுதியுள்ளார், அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இருந்தபோதிலும் பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ., மெயின் தேர்வு எழுதியுள்ளார். அத்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்காக அவருக்கு திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) பி.டெக்.,கெமிக்கல் துறையில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த கிராமத்திலிருந்து முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவி சபிதா

இதுகுறித்து சபிதா திருச்சியில் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், “எளிய குடும்பத்தில் பிறந்து நான் எவ்வித கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். இதேபோல் அனைவரும் முயன்றால் வெற்றி பெறலாம். எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர் அனைவருக்கும் நன்றி” என்றார்

Intro:முதல் முறையாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஜே.இ.இ தேர்வு மூலம் வெற்றி பெற்று திருச்சி என்.ஐ.டி.யில் இணைந்துள்ளார்.

Body:குறிப்பு : இந்த செய்திக்கான கூடுதல் விஷுவல் கோவை நிருபர் சீனிவாசன் அனுப்பிவைப்பார்.....

திருச்சி: இட ஒதுக்கீடு இன்றி ஜே.இ.இ., தேர்வு மூலம் வெற்றி பெற்ற பழங்குடி இன மாணவி திருச்சி என்.ஐ.டி.யில் இணைந்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு அருகே காளியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜாமணி. இல்லத்தரசி.
இவர்களுக்கு 4 குழந்தைகள். வினிதா, கவிதா, சபிதா ஆகிய 3 மகள்களும், விக்னேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இதில் வினிதா, கவிதா ஆகியோர் ஏற்கனவே பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள்.
இதில் 3வது குழந்தையான சபிதா 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியங்காடு அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து வந்தார்.
இந்நிலையில் சபிதாவுக்கு மருத்துவக் கல்வி மீது மிகவும் ஆர்வம். எனினும் பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ., தேர்வுக்கு விளையாட்டுத்தனமாக தயாரானார். இதில் அவர் எழுதிய தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக அட்வாண்ஸ்டு தேர்வில் கலந்து கொண்டார். ஆனால் அட்வான்ஸ்டு தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை. எனினும் தொடர்ந்து நீட் தேர்வில் அவர் கலந்துகொண்டார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. எனினும் ஜே.இ.இ., மெயின் தேர்வில் வெற்றி பெற்றதற்காக அவருக்கு திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) பி.டெக்.,கெமிக்கல் துறையில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த கிராமத்தில் முதன்முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு மாணவி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சபிதா திருச்சியில் ஈ.டிவி பாரத் நிருபரிடம் கூறுகையில்,
ஏழை எளிய குடும்பத்தில் இருந்து பிறந்து நான் இந்த வெற்றியை பெற்றுள்ளேன். எவ்வித கோச்சிங் சென்டர் க்கும் செல்லாமல் ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். இதே போல் அனைவரும் முயன்றால் வெற்றி பெறலாம். எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர் அனைவருக்கும் நன்றி என்றார்.

Conclusion:ஜே.இ.இ மெயின் தேர்வில் பெற்ற சபிதா திருச்சி என்.ஐ.டி.யில் பி.டெக்., கெமிக்கல் துறையில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.