கோவை ராஜவீதியில் செந்தில்குமார் என்பவர் நடத்திவரும் சுமங்கலி ஜுவல்லரி என்னும் நகைக்கடையில், இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் காவல் பணியிலிருந்த செக்யூரிட்டி, தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பின்பு தீ அணைக்கப்பட்டது.
கடையிலிருந்த தங்க, வைர, வெள்ளி நகைகள் தனிப்பெட்டகத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்ததால் அவை சேதமடையவில்லை. அதேவேளையில் தீ விபத்தில் நகைக்கடையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர் மேலும் சேத மதிப்பு குறித்து தீயணைப்புத் துறையினரும் பெரிய கடைவீதி காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:
அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கென்று ஸ்பெஷல் வார்டு!