உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் தீயணைப்புத் துறையினர் சார்பாக கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மத்திய கூட்றவு வங்கி தலைவர் கிருண்னா குமார், பொள்ளாச்சி துணை ஆட்சியர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில், தீயணைப்பு வாகனம் மூலம் முக்கிய வீதிகள், கடைகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சின்போது, பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பணியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா தொற்று: சாலைகளில் குளோரின் பவுடர் தெளிப்பு