கோவை: வேலூரை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் IFS நிதி நிறுவனத்தின்மீது நிதி மோசடிப்புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் நிதி நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை, வேலூர், கோவை உட்பட தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது. IFS நிதி நிறுவனம், அதில் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் உள்ள IFS நிதி நிறுவனத்தின் ஆடிட்டர் வெண்ணிலா வீட்டில் சென்னை மற்றும் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை 8 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. ஆடிட்டர் வெண்ணிலா சென்னையில் இருந்து சொந்த வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் IFS நிதி நிறுவனத்தின் கிளை இயக்குநர் வீட்டிற்கு சீல்!