ETV Bharat / state

வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் மோசடி வழக்கு; ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கி 50 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் - வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் மோசடி வழக்கு

Winstar India City Developers: சேலம் வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 29 பேருக்கு 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

winstar india city developers scam
வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் மோசடி வழக்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 7:46 AM IST

கோயம்புத்தூர்: சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 2017ஆம் ஆண்டு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் உள்பட 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு நபருக்கும் 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையானது வழங்கப்பட்டது.

மேலும், 31 பேரில் 29 பேர் இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்டனர். இருவர் தங்களது குற்றப்பத்திரிகையை சொந்த வாகனத்தில் எடுத்துச் சென்றனர். மற்ற 27 பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை எடுத்துச் செல்வதற்காக மினி லாரியை வாடகைக்கு பிடித்தனர். மினி லாரி நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகை லாரியில் மூட்டை மூட்டையாக ஏற்றப்பட்டு சேலம் கொண்டு செல்லப்பட்டது.

வழக்கு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த அரசு வழக்கறிஞர் முத்துவிஜயன்,“ 29 நபர்கள், இரண்டு நிறுவனங்கள் என 31 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் பக்கம் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே முதல் முறையாக தமிழக காவல்துறை, வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்து இருக்கின்றது. 1,686 நபர்கள் ரூ.75 கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக புகார் கொடுத்து உள்ளனர். இந்த வழக்கில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் புகார் அளிக்க இருக்கின்றனர். காவல்துறை தரப்பிலும், அரசு தரப்பிலும் ஒத்துழைப்பு கொடுத்ததன் காரணத்தினால் விரைவாக குற்றப்பத்திரிகை தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடிந்தது.

ஆறு மாத காலமாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் 30 பேர் சேர்ந்து இந்த குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு முன்பு எந்த ஒரு வழக்கிற்கும் நகல் கொடுப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்ததில்லை. இதுதான் முதல் வழக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அதற்கு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். டிஜிட்டல் காப்பியாகக் கொடுக்க சட்டத்தில் இடமில்லை என்பதால், 50 ஆயிரம் பக்கங்களும் நகல்களாகவே வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:"சனாதன தர்மம் எந்தவொரு பாகுபாட்டையும் ஆதரிக்காது" - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.