கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் காவல் நிலையத்தில் கடந்த பத்து நாள்கள் முன்பு பெண் காவலர் ஒருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரது சளி, ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவருக்கு இஸ்ஐ(ESI) மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்த 46 காவலர்களுக்கு கரோனா பரிசோதனை நடந்தது. அதில் எஸ்ஐ (si), அவரது மனைவி, மகன், பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இஸ்ஐ(ESI) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோட்டூர் காவல் நிலையத்தையே பூட்டினர்.
இந்நிலையில் இஸ்ஐ(ESI)-யில் சிகிச்சை பெற்று வந்த பெண் காவலர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.
இதையும் படிங்க: பரமகுடி அதிமுக எம்எல்ஏ-வுக்கு கரோனா உறுதி