ETV Bharat / state

நீட் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரதம் - பிரின்ஸ் கஜேந்திரபாபு - நீட் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எனில் உண்ணாவிரதம்

நீட் தொடர்பாக ஆளுநர், குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் 30ஆம் தேதிமுதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போவதாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு பேட்டி
பிரின்ஸ் கஜேந்திரபாபு பேட்டி
author img

By

Published : Jan 11, 2022, 3:31 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "திமுக அரசு பதவியேற்றவுடன் ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜன் தலைமையில் நீட் தொடர்பாக வல்லுநர்கள் அடங்கிய குழு ஆய்வுசெய்து சட்ட முன்வடிவு வழங்கியது.

இந்தச் சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் இதுவரை குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்பவில்லை. மூன்று மாத காலமாக அனுப்பாமல் காலதாமதம் செய்துவருகிறார். நீட் தேர்வால் பல்வேறு துன்பத்தில் மாணவர்கள் உள்ளனர். கூட்டாட்சித் தத்துவத்தை ஆளுநர் மீறி செயல்படுகிறார். ஆளுநர் சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி மத்திய அரசு ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு பேட்டி

வரும் 30ஆம் தேதி காந்தி நினைவு நாளில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நீட் தொடர்பாக ஆளுநர், குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜனவரி 30ஆம் தேதிமுதல் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பாக மட்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த உள்ளோம். இதன்மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் நீட் பாதிப்பை எடுத்துச் செல்வோம்" என்றார். இந்தச் சந்திப்பின்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.