ETV Bharat / state

யானையை கடவுளாக மதிக்கும் விவசாய குடும்பம்!

author img

By

Published : Dec 4, 2020, 5:30 PM IST

Updated : Dec 5, 2020, 4:13 PM IST

கோயம்புத்தூர்: யானை.. 'அது எங்க சாமி, எங்களை ஒன்னும் பன்னாது' தண்ணீர் குட்டை அமைத்து யானைகளின் தாகத்தை தீர்க்கும் விவசாய குடும்பம் குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

யானையை கடவுளாக மதிக்கும் விவசாய குடும்பம்

தண்ணீர், உணவிற்காக வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியே வருகின்றன. அப்படி வரும் யானைகள் விவசாயி நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் அதிகம் நடைபெறும் பகுதியாக கோயம்புத்தூர் வனக்கோட்டம் உள்ளது.

அங்குள்ள யானைகளை பாதுகாக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக யானைகளுக்கு தேவையான தண்ணீர், உணவுகளை வனப்பகுதியிலேயே கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். இருப்பினும் யானைகளின் குணம் உணவிற்காக பல கிலோ மீட்டர் நடப்பது என்பதால் அவை மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியே வருகிறது. இதனால் யானைகள் மின்சார வேலி, விபத்தில் சிக்சி உயிரிழக்கின்றன.

இதை தவிர கோயம்புத்தூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள விராலியூர் பகுதியைச் சேர்ந்த விவசாய குடும்பத்தினரான கருப்பசாமி-அன்னம்மாள் தம்பதி, தனது மகன்களான சுதாகரன் , நந்தகுமார் ஆகியோருடன் இணைந்து யானைகளுக்கு தண்ணீர் குட்டை அமைத்துள்ளனர்.

இதன் மூலம் யானைகள் மட்டும் பயனடையும் என அவர்கள் நினைத்தனர். ஆனால் தண்ணீர் குட்டைக்கு தினமும் மான்கள், காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகளும் வர தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக தம்பதியின் மகன் நந்தகுமார் கூறுகையில், "நாங்கள் ஏற்படுத்தியுள்ள இந்த தண்ணீர் குட்டை மூலம் மனித விலங்கு மோதல் தவிர்க்கப்படும் என நம்புகிறோம். எங்களுக்கு இங்கு சொந்தமாக 20 ஏக்கர் விளைநிலம் உள்ளது. முதலில் நாங்கள் இந்த தண்ணீர் குட்டை மூலம் விவசாயம் செய்து வந்தோம். அப்போதே மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இங்கு வந்து தண்ணீர் குடித்து செல்லும்.

தற்போது சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்கிறோம். இதனால் தண்ணீர் குட்டையை என்ன செய்வது என நினைத்தோம். அப்போது தினமும் யானைகள் இங்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்கே சென்றது. அப்போதுதான் இந்த தண்ணீர் குட்டையை பாதுகாத்து யானைகளுக்கு உதவலாம் என்று எங்களுக்கு தெரிந்தது.

தற்போது யானைகள் எங்களது தண்ணீர் குட்டை வரை மட்டுமே வந்து செல்கிறது. அருகே உள்ள கிராமத்திற்கு செல்வதில்லை. அதோடு இங்கு வரும் யானைகள் எங்களது பயிர்களை எதுவும் செய்வதில்லை. இரவில் எங்களை யானைகள் பார்த்தாலும் அப்படியே விலகி செல்கிறது. யானை.. அது எங்க சாமி" என்றார்.

மேலும் நந்தகுமாரின் பெரியப்பா ரத்தினசாமி கூறுகையில், "கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு யானைகள் இப்பகுதியில் கடும் சேதம் ஏற்படுத்தி வந்தன. இப்போது எங்களுடைய 50 சென்ட் நிலத்தில் தண்ணீர் குட்டை அமைத்ததால் யானைகள் கிராமத்திற்குள் செல்வதில்லை. எங்க சாமி யானைக்கு தண்ணீர் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: அத்துமீறுகிறதா ஆதிப்பேரு உயிர் - ஆக்கிரமிக்கப்படும் யானையின் வலசை பாதைகள்!

Last Updated : Dec 5, 2020, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.