ETV Bharat / state

"தக்காளி ரூ.150 விற்றாலும் நாங்கள் கடனாளி தான்" - கோவை விவசாயி வேதனை.. சிறப்பு தொகுப்பு!

தக்காளி விலை கிலோ 150 ரூபாய்க்கு விற்றாலும், அரசு சார்பில் விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என விவசாயிகள் கூறுகின்றனர். இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 7, 2023, 6:33 PM IST

தக்காளி விவசாயி குழந்தைவேலு பேட்டி

கோயம்புத்தூர்: நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தக்காளி விலையால், வெங்காயம் உரிக்காமலேயே குடும்ப பெண்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு கிலோ தக்காளியின் விலை 150 ரூபாயைத் தாண்டி உள்ள நிலையில் விலையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன், ஒரு பகுதியாகக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க வியாபாரிகள் தக்காளிகளை வாங்கி இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தக்காளி விலை இப்படிக் கட்டுக்கடங்காமல் உயரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. ஒரு மாதம் முன்புதான், போதிய விலை கிடைக்கவில்லை என்பதால் தக்காளி விவசாயிகள் தங்களது சாகுபடியை விளை நிலத்திலேயே அழித்தனர். இப்போது, தக்காளியின் விலை சில மாநிலங்களில் கிலோவுக்கு 150 ரூபாயைத் தாண்டியுள்ளது.

தக்காளியின் விலை மட்டுமல்ல, வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட அன்றாட உபயோகக் காய்கறிகளின் விலையும் உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.1200 விற்பனை செய்யப்படுகிறது.

எனினும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் நஷ்டத்தில் உள்ளதாகத் தக்காளி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து நரசிபுரத்தில் உள்ள தக்காளி விவசாயிகள் கூறுகையில் ஏக்கருக்கு 1 லட்சம் செலவு செய்து தக்காளி நடவு செய்தோம் ஆனால் அதற்கான தொகையில் பாதி தான் கிடைத்துள்ளது.எங்களிடம் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியை 900 ருபாய்கு வாங்கி 1500 ருபய்க்கு விற்பனை செய்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விலை இல்லாததால் காட்டிலேயே தக்காளியை அழித்தோம், ஆனால் இன்று கிலோ 150க்கு விற்பனையாகிறது.

பருவமழை உரிய நேரத்தில் பெய்யாதது ஒரு காரணமாக இருந்தாலும் வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்து விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். அரசு விவசாயிகளிடம் விவசாய பொருட்களை வாங்கி அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், அரசு கொள்முதல் செய்து விவசாய பொருட்களைச் சேமித்து வைத்தால் ஒரே விலையில் ஆண்டு தோறும் விற்பனை செய்ய முடியும், தக்காளி அதிக விளைச்சல் இருக்கும் போது அரசு அதனை வாங்கி ஜாம் அல்லது பல்வேறு விலை பொருட்களை விற்பனை செய்யலாம் அதன் மூலம் அனைவரும் பயன்பெற முடியும் எனத் தெரிவித்தார்.

மேலும் எங்களிடம் குறைந்த விலைக்குத் தக்காளியை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கின்றன ஆனால் தக்காளியை விளைவிக்கும் நாங்கள் கடனாளியாகவே கடைசி வரை இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.மேலும் இதே போன்று சின்ன வெங்காயம் இருப்பு குறைந்து வருகிறது இதனால் அதன் விலையும் கடுமையாக உயர வாய்ப்பு உள்ளதால் அதனையும் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: Tomato Price Hike: உத்தரகாண்டில் உச்சத்தைத் தொட்ட தக்காளி விலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.