மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் கோடிக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வாழை, மஞ்சள், புடலங்காய் உள்ளிட்டவற்றை ஊர்வலமாக எடுத்துவந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![விவசாயிகள் நூதனப் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-02-farmers-protest-delhi-visu-tn10027_30112020125213_3011f_00920_248.jpg)
அப்போது அவர்கள் மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி பேசுகையில், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது போராட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
![விவசாயிகள் நூதனப் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-02-farmers-protest-delhi-visu-tn10027_30112020125213_3011f_00920_746.jpg)
விவசாயிகளை சந்திப்பதற்கு மத்திய அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகள் எதுவும் இல்லை என்றால் விவசாயிகள் மத்திய அரசை சந்திக்க தயாராக இருக்கிறோம். இந்த வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. இந்த சட்டத்தை பல்வேறு கட்சிகள் எதிற்கும் நிலையில் பிரதமர் மோடி சிந்திக்க வேண்டும்.
![விவசாயிகள் நூதனப் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-02-farmers-protest-delhi-visu-tn10027_30112020125213_3011f_00920_181.jpg)
டெல்லியில் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு காரணம் விவசாயிகள் அல்ல, மத்திய அரசுதான். மத்திய அரசு விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகள் கூட்டு சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியில் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: போராட்டம் செய்தவர்களை தாக்கிய காவல் துறை