இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் சு. பழனிச்சாமி, "நொய்யல் ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதை மாவட்ட நிர்வாகம் கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்புக் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
வருவாய்த் துறையின் மூலம் நில அளவீடு செய்ய வேண்டும். நொய்யல் ஆற்றில் ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் நிறுவனங்கள் வணிக ரீதியான செயல்களில் ஈடுபட்டுவருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அரசு கருத்தில்கொண்டு அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த ஆற்றுநீரை நம்பியுள்ள கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் செழிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: கோவையில் ஒரேநாளில் 15 பேருக்கு கரோனா!