பொள்ளாச்சி : மே-18 பொள்ளாச்சி தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எம் பி எஸ் கோழிப் பண்ணை நிர்வாகம். இதில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பண்ணை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பல்லடம் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பண்ணை உரிமையாளர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது “ வங்கியில் கடன் பெற்று கோழிப்பண்ணை அமைத்து கோழிகளை வளர்த்து நிர்வாகத்துக்கு தருகிறோம். அப்போதுதான் நிர்வாகம் கோழி வளர்க்க அடிப்படை தொகையை தருகிறீர்கள்” என தெரிவித்தனர்.
பின் நிர்வாக இயக்குனர் பண்ணை உரிமையாளர்கள் மத்தியில் பேசுகையில், “ கோழிப் பண்ணை உரிமையாளர்களின் நலன் கருதி நிர்வாகம் எப்போதும் துணை நிற்கும். தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளீர்கள். கூடுதலாக கோழி வளர்ப்பில் ஈடுபட்டால் அதற்கு உண்டான தொகை தர நிர்வாகம் உறுதி அளிக்கிறது. மேலும் பண்ணை உரிமையாளர்கள் நலன் காக்க விரைவில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் நிறுவனர் அருள்முருகு, சரவணா முருகு, துணைநிறுவனர் பிரஜித் முருகு, பொதுமேலாளர் மாதாவன், துணைபொது மேலாளர் ஈஸ்வரன், கிளை மேலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன்' - ரஜினிகாந்த்