கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது யூசப். இவர் இந்து - இஸ்லாமிய மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் முகநூலில் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிறையில் உள்ள அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்த பாஷாவுக்கு ஆதரவாகவும் பதிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதையறிந்த காவல்துறையினர் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், முகநூலில் பதிவிட்டதாக முகமது யூசுப் மீது இருப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்துள்ள குனியமுத்தூர் காவல்துறையினர், அவரைக் கைது செய்ய வீட்டிற்குச் சென்றனர். அங்கு அவர் இல்லாததால் சுமார் இரண்டு மணி நேரம் அவரது வீட்டை சோதனையிட்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்றுவிட்டு வந்தவர் என்று தெரியவந்துள்ளது.