கோவையில் கடந்த இரண்டு நாட்களாக குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் மக்னா யானையானது சேத்துமடை, கிணத்துக்கடவு, நல்லிகவுண்டன்பாளையம், வழுக்குப்பாறை, முத்துக்கவுண்டனூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளைத் கடந்து சேத்தூர் பகுதியில் முகாமிட்டுள்ளது.
அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் இறங்கிய வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மயங்க மருந்தை யானையின் உடலில் செலுத்தியுள்ளனர். மக்னா யானைக்கு வனத்துறை மருத்துவர் சதாசிவம் மயக்க ஊசி செலுத்தினார். அதன் பிரத்யேக காட்சிகள் வெளியாகியுள்ளன.