ETV Bharat / state

திமுக பொய் வழக்கு போட்டு முடக்க நினைக்கிறது- எஸ்.பி. வேலுமணி மைத்துனர் - vigilance raid

அதிமுகவினர் மீது திமுக பொய் வழக்கு போட்டு முடக்க நினைக்கிறது என எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர் தெரிவித்துள்ளார்.

ex-minister-sp-velumani-relatives-comment-on-vigilance-raid
திமுக பொய் வழக்குப் போட்டு முடக்க நினைக்கிறது- எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர்
author img

By

Published : Aug 10, 2021, 4:17 PM IST

Updated : Aug 10, 2021, 4:36 PM IST

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய 52 இடங்களில் இன்று (ஆக. 10) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். கோவையில் மட்டும் 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

கோயம்புத்தூரில் பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கோடிக்கணக்கில் ஊழல் செய்திருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் புகார்கள் எழுந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

கோயம்புத்தூரில் எஸ்.பி. வேலுமணி இல்லம், அவரது சகோதரர் அன்பரசன் இல்லம், பொறியாளர் சந்திர பிரகாஷ், சந்திரசேகர் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

மதுக்கரையில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்ட நிலையில், சோதனை குறித்து அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

திமுக பொய் வழக்குப் போட்டு முடக்க நினைக்கிறது- எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர்

அதில், “அரைமணி நேரத்தில் சோதனை முடிந்துவிட்டது. சோதனையின்போது எவ்வித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக உள்ளது. பொய் வழக்கு போட்டு அதிமுகவை முடக்க திமுக நினைக்கிறது. அது நடக்காது” என்றார். மேலும், கூடிய விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: ரெய்டுக்கு பதில் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றலாம் - பொள்ளாச்சி ஜெயராமன்

Last Updated : Aug 10, 2021, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.