ETV Bharat / state

ரூ. 3 கோடிக்கு நிலம் 'அபேஷ்': முன்னாள் அமைச்சர் சகோதரருக்கு நெருக்கமானவர் கைது - முன்னாள் அதிமுக அமைச்சரின் தம்பி அன்பரசன்

நில மோசடிப்புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரரான அன்பரசனுக்கு நெருக்கமானவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 3 கோடிக்கு நிலம் 'அபேஷ்': முன்னாள் அமைச்சர் சகோதரனுக்கு நெருக்கமானவர் கைது

author img

By

Published : Feb 11, 2022, 7:54 AM IST

கோவை: பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது மகன் ராஜமாணிக்கம். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பழனியம்மாளுக்கு, கடந்த 1988ஆம் ஆண்டு அரசு சார்பில் 51 சென்ட் நிலம் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2011ஆம் ஆண்டு பழனியம்மாள் காலமானதையடுத்து, அரசு வழங்கிய நிலத்தை ராஜமாணிக்கம் பராமரித்து வந்தார்.

இந்நிலையில் இந்நிலத்தை கடந்த 2020ஆம் ஆண்டு இதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர், போலி ஆவணங்களைத் தயாரித்து, நல்லறம் முருகவேல் என்பவரிடம் 3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜமாணிக்கம், நில விற்பனை எவ்வாறு நடைபெற்றுள்ளது என விசாரித்துள்ளார்.

நில மோசடியில் கைது செய்யப்பட்ட ராஜமாணிக்கம், நல்லறம் முருகவேல்

அப்போது உயிரிழந்த பழனியம்மாளின் பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து, ராஜமாணிக்கத்திற்கு பவர் ஆப் அட்டார்னி கொடுத்ததாக மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் ராஜமாணிக்கம் புகாரளித்தார்.

புகாரின் பேரில் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், மாணிக்கம், நல்லறம் முருகவேல் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் நீதிமன்ற உத்தரவின்படி பல்லடம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணிக்கம், பேரூர் பேரூராட்சியின் 14ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரோஜினியின் கணவர் ஆவார்.

மேலும் மற்றொரு குற்றவாளியான நல்லறம் முருகவேல், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசனுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலுக்கு ஒரு வார காலமே உள்ள நிலையில், நில மோசடியில் அதிமுக வேட்பாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Video Leak - லஞ்சம் வாங்கிய போலி உணவுத்துறை அலுவலர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.