ETV Bharat / state

மேற்குமண்டலத்தை பாலியல் அபாயமிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும்: எவிடன்ஸ் கதிர் வலியுறுத்தல்

author img

By

Published : Mar 27, 2019, 5:55 PM IST

கோவை: தமிழ்நாட்டின் மேற்கு மண்டல பகுதிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதால், அப்பகுதியை பாலியல் அபாயமிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் எவிடன்ஸ் கதிர் வலியுறுத்தியுள்ளார்.

எவிடன்ஸ் கதிர்

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சமூக ஆர்வலர் எவிடன்ஸ் கதிர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

"தமிழ்நாட்டில் குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள காவல்துறை பெண் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைத்திட வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறுமி விவகாரத்தில் விழிப்புணர்வு அதிகளவில் வெளிப்படவில்லை என்பது வேதனையாக உள்ளது. சிறுமியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யவில்லை. இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், ஒரு மருத்துவர் மட்டுமே பிரேத பரிசோதனை செய்துள்ளார். இறந்த சிறுமி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரம் அதிக அளவில் வெளியே பேசப்படவில்லை. மேற்கு மண்டல பகுதிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதியை பாலியல் அபாயமிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதனிடையே சிறுமி கொலை வழக்கில் நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Intro:மேற்கு மண்டல பகுதியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் மேற்கு மண்டலம் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவதால் பாலியல் அபாயமிக்க பகுதியாக அறிவிக்க வேண்டும் என எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

Body:துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சமூக ஆர்வலர் எவிடன்ஸ் கதிர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர் தமிழகத்தில் குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் இதனை தடுக்க ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள காவல்துறை பெண் அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைத்திட வேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார் இந்த சிறுமி விவகாரத்தில் விழிப்புணர்வு அதிகளவில் வெளிப்படவில்லை என்பது வேதனையாக உள்ளதாகவும் சிறுமியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யவில்லை எனவும் 2 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து இருக்க வேண்டும் ஆனால் ஒரே மருத்துவர் மட்டுமே பிரேத பரிசோதனை செய்துள்ளார் என கூறிய அவர் மேலும் இறந்த சிறுமி தலித் என்பதால் இந்த விவகாரம் அதிக அளவில் வெளியே பேசப் படவில்லை என்றும் மேற்கு மண்டலத்தில் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் பாலியல் அபாயம் இருக்கும் பகுதியாக மேற்கு மண்டல த்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனிடையே சிறுமி கொலை வழக்கில் நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் உடலை பெற்றுக் கொண்டு ஊர் திரும்பினர் இன்று மாலை கஸ்தூரிநாயக்கன்புதூரில் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.