கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குள்பட்ட மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் சாலை சம்பரவள்ளி பிரிவில் தனியாருக்குச் சொந்தமான சுற்றுச்சுவரில் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகளைத் தடுக்க ஈட்டிகள் பதிக்கப்பட்டிருந்தன.
இச்சுவரில் அமைக்கப்பட்ட ஈட்டிகளால் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வனத் துறைக்கு அதனை அகற்ற கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான செய்தி ஈடிவி பாரத் தமிழில் ஜனவரி 3ஆம் தேதி வெளியானது.
அதனைத்தொடர்ந்து இச்செய்தி வனத் துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்த சிறுமுகை வனத் துறையினர் சுற்றுச்சுவரின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சுவரில் பதிக்கப்பட்டிருந்த 131 ஈட்டிகளையும் அகற்றினர்.
வனத் துறையின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு அளித்த விலங்கு நல ஆர்வலர்கள், செய்தியாக வெளியிட்ட ஈடிவி பாரத் தமிழுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சந்தன மரக்கடத்தலைத் தடுக்க வலியுறுத்தி வனத்துறையினரிடம் கோரிக்கை!