கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீடு வேயில் "பார்முலா பாரத்" என்னும் கல்லூரி மாணவர்கள் தயாரித்த பந்தைய கார்களின் போட்டிகள் நேற்று (ஜனவரி 26) நடைபெற்றன. நாடு முழுவதும் இருந்து பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் தயாரித்த கார்கள் பந்தயத்தில் ஈடுபடுத்தப்பட்டன.
அந்த வகையில், மின்சாரம் மற்றும் பெட்ரோலில் ஓடக்கூடிய பந்தைய கார்கள் பங்கேற்றன. அப்போது கார்களின் வடிவமைப்பு, செயல்திறன், தொழில்நுட்பம் ஆகியவை சரி பார்க்கப்பட்டது. புனேவை சேர்ந்த மாணவர்கள் தயாரித்த பெட்ரோலில் இயங்கக்கூடிய பந்தய கார்கள் அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்றன.
அதேபோல விஜடி புனே, ஜஜடி கரக்பூர் மாணவர்கள் தயாரித்த பேட்டரியில் இயங்கும் பந்தைய கார்களும் அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்றன. இந்த போட்டியில் கோவை பிஎஸ்ஜி ஜடெக் கல்லூரி மாணவர்கள் பேட்டரியில் இயங்கும் பந்தைய காரை உருவாக்கி போட்டியில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், "2 ஆண்டுகள் தொடர் முயற்சி மற்றும் மூத்த மாணவர்களின் உதவியால் சுமார் 10 லட்சம் செலவில் பேட்டரியில் இயங்கும் பந்தைய காரை உருவாக்கி உள்ளோம். சில சோதனைகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் அனைத்து சோதனையிலும் வெற்றி பெறுவோம். பெட்ரோலுக்கு மாற்றாகவும் சுற்று சூழலை பாதிக்காத வகையிலும் இந்த பந்தைய காரை உருவாக்கி உள்ளோம். இனி வரும் காலங்களில் பேட்டரியில் இயங்கும் கார்களின் ஆதிக்கமே இருக்கும் என தெரிவித்தனர்
இதையும் படிங்க: குடியரசு தினம்: வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்த நாடாளுமன்றம்..