கோயம்புத்தூர் மாவட்டம் கோவைபுதூரில் ஏசியன் ஈமு ஃபார்ம் என்ற நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டு செயல்பட்டது. இதன் நிர்வாகம் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தினர்.
இதனை நம்பி சுமார் 45 பேர் தலா 68 லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்தனர். பின்னர் இவர்களுக்கு வட்டியும் முதலும் கொடுக்காமல் நிறுவனம் மோசடி செய்தது.
இதுகுறித்து செங்காளிப்பன் என்பவர் மாவட்ட பொருளாதார குற்றவியல் பிரிவில் புகார் அளித்தார். தற்போது ஏசியன் ஈமு ஃபார்ம் நிறுவனத்தின் இயக்குநர் சுப்ரமணி உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கும் தலா 19 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நில மோசடி வழக்கு: மன்னர் குடும்பத்தை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!