கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவிய சூழலில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது.
ஆனால், கோவை மாவட்டத்தின் அருகாமையில் உள்ள கேராளவில் போதுமான மழை இல்லாததால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வறட்சி நிலவிவருகிறது.
இதன் காரணமாக, தண்ணீர் தேடி யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் அருகில் உள்ள கிராமப் பகுதிக்குள் நுழைவது வழக்கமாகிவிட்டது.
இதில், பவானிசாகர் அணை நீர் பிடிப்புப் பகுதியான சிறுமுகை பகுதியில் தண்ணீர் அருந்த நூற்றுக்கணக்கான யானைகள் நாள்தோறும் வர தொடங்கியுள்ளன.
இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், "மேற்கு தொடர்ச்சி மலையில் கடுமையான வறட்சி நிலவுவதால் யானைகள் இங்கு வர தொடங்கியுள்ளன. கோவை மாவட்டத்தின் வனப்பகுதியில் உள்ள நீர் தொட்டிகளை சீரமைத்து தண்ணீர் விட வேண்டும்.
அவ்வாறு செய்யவில்லை எனில் பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் குறையும்போது யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் நுழைவதற்கு வாய்ப்பு உள்ளது" என்றார்.