ETV Bharat / state

சலாம்...கம்பீர நடை... களைகட்டும் யானைகள் புத்துணர்வு முகாம்

author img

By

Published : Dec 15, 2019, 9:59 AM IST

கோவை: மேட்டுப்பாளையம் அருகே யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து லாரிகள் மூலம் யானைகள் வந்தடைந்தன.

யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம்
யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில், திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் புத்துணர்வு நலவாழ்வு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக் காட்டில் நான்கு ஆண்டுகளும், அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஏழு ஆண்டுகளும் மொத்தம் 11 ஆண்டுகள், இந்த முகாம் நடைபெற்றுள்ளது.

வழக்கம்போல் இந்த ஆண்டு 12ஆவது யானைகள் புத்துணர்வு முகாம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு, தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் பொதுப்பணித்துறை, வனத்துறைக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முகாமில் சமையல் கூடம், உணவருந்தும் இடம், யானை பாகன்கள் தங்குமிடம், மருத்துவ முகாமிற்கான செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, யானைகளை குளிக்க வைப்பதற்காக குளியல் மேடை மற்றும் ஷவர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமைச் சுற்றிலும் சூரிய மின் வேலி, தொங்கும் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம்

இதனை முன்னிட்டு நேற்று யானைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக முகாமுக்கு வந்துள்ளன. இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கண்டு ரசித்து வருகின்றனர்.

முகாமில் மொத்தம் 28 யானைகள் கலந்துகொண்டு புத்துணர்வு பெற உள்ளதாகவும், 48 நாட்கள் நடைபெறும் முகாமிற்கு ரூ.1 கோடியே 40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கி உள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோத்தகிரி சாலையில் உலாவந்த காட்டுயானை - வாகன ஓட்டிகள் பீதி!

Intro:மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாம் நாளை (15.12.19) தொடங்குகிறது தமிழக கோவில்களில் இருந்து லாரியில் ஏற்றப்பட்ட யானைகள் முகாமுக்கு வரத்தொடங்கின முதன்முதலாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் யானை ஜெயமால்யதா முகாம் வந்தடைந்தது.
Body: தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்திலுள்ள திருக்கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் புத்துணர்வு நலவாழ்வு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக் காட்டில் 4 ஆண்டுகளும் அதனை தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் 7 ஆண்டுகளும் மொத்தம் 11 ஆண்டுகள் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்றது. வழக்கம்போல் இந்த ஆண்டு 12 வது யானைகள் புத்துணர்வு சிறப்பு நலவாழ்வு முகாம் நாளை(15.12.19) தொடங்க உள்ளது இதனையொட்டி தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலப்பரப்பில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது முகாமில் முகாம் அலுவலகம்.சமையல் கூடம் ,உணவருந்தும் இடம், யானை பாகன்கள் தங்குமிடம் மருத்துவ முகாமிற்கான செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, யானைகளை குளிக்க வைப்பதற்காக குளியல் மேடை மற்றும் ஷவர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. முகாமை சுற்றிலும் சூரிய மின் வேலி மற்றும் தொங்கும் மின் வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை முகாம் தொடங்குவதை யொட்டி இன்று பகல் முதல் தமிழகத்தில் உள்ள திருக்கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக முகாமுக்கு வரத்தொடங்கின நேற்று இரவு 2 மணிக்கு லாரியில் ஏற்றப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா பகல் 12 மணிக்கு மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள தனியார் எடை மேடைக்கு வந்தது அங்கு லாரியின் மொத்த எடையை கணக்கிட்ட பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் வளாகத்தில் யானைகள் இறங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த சாய்வு தள மேடையை அடைந்தது அங்கு பாகன் மற்றும் உதவிப்பாகன் உதவியுடன் லாரியில் இருந்து பத்திரமாக யானை இறக்கப்பட்டது இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கண்டு ரசித்தனர். தொடர்ந்து யானைகள் முகாமிற்கு ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வந்துகொண்டிருந்தன. முகாமில் மொத்தம் 28 யானைகள் கலந்துகொண்டு புத்துணர்வு பெற உள்ளதாகவும் 48 நாட்கள் நடைபெறும் முகாமிற்கு ரூ.1 கோடியே 40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கி உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.