கோவை மாவட்டம் வால்பாறை அருகே அய்யர் பாடி எஸ்டேட் பகுதியில் 6 காட்டு யானைகள் தொடக்கப் பள்ளி சத்துணவு மையத்தை உடைத்து உள்ளிருந்த அரிசி, பருப்பு போன்ற பொருட்களை சேதப்படுத்தியது.
மேலும் வனப்பகுதி அருகே காட்டு யானைகள் முகாமிட்டு சத்துணவு மையத்திற்கு வந்ததால் பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இதைத்தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:‘ரஜினி நிச்சயம் ஆட்சியைப் பிடிப்பார்’ - தமிழருவி மணியன் ஆருடம்!