கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையின் அருகே உள்ள விருந்தினர் மாளிகை பின்பகுதியில், இரண்டு குட்டி யானை உட்பட ஐந்து யானைகள் வனப்பகுதியை விட்டு அறிவுத்திருக்கோயில் வழியாக சாலையை கடந்து வெளியே வந்துள்ளது.
இதைப் பார்த்த பொதுப்பணித்துறை ஊழியர்கள், வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்ட முயற்சித்தனர். எனினும் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னரே அவை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன.
இப்பகுதியில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருப்பதால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க; 'கடந்த பத்தாண்டுகளில் கேரளாவில் 64 யானைகள் இயற்கைக்கு மாறாக உயிரிழப்பு!'