கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் 12ஆவது கோயில் யானைகள் முகாம் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. 48 நாட்கள் நடைபெற்ற இந்த யானைகள் முகாம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
இந்த முகாமில் பங்கேற்ற 28 கோயில் யானைகளுக்கு 48 நாட்கள் பசுந்தீவனங்கள், ஆயுர்வேத மருந்துகள், நடைபயிற்சி, சத்தான உணவுகள், சவர் குளியல் போன்றவை வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி யானை பாகன்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் தீர்த்துக் கொண்டனர்.
இதையும் படிங்க...பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!