ETV Bharat / state

இசையமைப்பாளருக்கே டஃப் கொடுக்கும் கோயில் யானை: மவுத் ஆர்கன் வாசித்து அசத்தல் - மவுத் ஆர்கன் வாசித்த யானை

கோவை: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடக்கும் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாமில் கலந்துகொண்ட கோயில் யானை, மவுத் ஆர்கன் வாசித்து அசத்தியுள்ளது.

மவுத் ஆர்கன் வாசித்து அசத்திய கோயில் யானை
மவுத் ஆர்கன் வாசித்து அசத்திய கோயில் யானை
author img

By

Published : Jan 29, 2020, 11:16 AM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 12ஆவது யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகின்றது. முகாமில் 28 யானைகள் புத்துணர்வு பெற்றுவருகின்றன.

இந்நிலையில் முகாமில் கலந்துகொண்ட யானைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறப்புப்பெற்று விளங்குகிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர்வட்டம் அருள்மிகு யோக ராமச்சந்திரா சுவாமி திருக்கோயிலைச் சேர்ந்த யானை லட்சுமி, குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டுள்ளது.

குழந்தையை கொஞ்சும் லட்சுமி

யானையின் அருகில் பாகன் குழந்தைகளைக் கொண்டுசென்றால் தும்பிக்கையால் குழந்தையை ஆரத்தழுவி மகிழ்ச்சியடைவதை நம்மால் காணமுடிகிறது. மேலும், பாகன் ரங்கனின் அன்பு கட்டளைக்கேற்ப தும்பிக்கையால் சலங்கைமணி அடித்தும் கம்பு சுழற்றியும் அசத்தியுள்ளது.

சிலம்பம் சுற்றும் கோயில் யானை

மேலும், இசையமைப்பாளர்களுக்கே டஃப் கொடுக்கும்விதமாக தனது தும்பிக்கையால் மவுத் ஆர்கன் வாசித்து, பார்வையாளர்களை வியக்கவைத்துள்ளது. லட்சுமி யானையின் இந்த அசாத்திய திறமை, நம்மை ஆச்சரியத்தில் திகைத்தவைக்கிறது.

மவுத் ஆர்கன் வாசித்த லட்சுமி யானை

இதையும் படிங்க: 'நாங்க கும்பலாக சுத்துவோம்...' - ஒட்டன்சத்திரம் பகுதியில் அலப்பறை செய்யும் காட்டு யானைகள்

Intro:மேட்டுப்பாளையம் யானைகள்
சிறப்பு நலவாழ்வு முகாமில் குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டு தும்பிக்கையால் கொஞ்சி விளையாடும்
படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள்அம்மன் திருக்கோவில் யானை லட்சுமி. மவுத் ஆர்கன் வாசித்தும் சலங்கை மணி அடித்தும் கம்பு சுழற்றி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது...Body:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில்
அருகில் தேக்கம்பட்டி பவானி
ஆற்றுப்படுகையில் தமிழக அரசு இந்து
சமய அறநிலையத்துறை சார்பில்
12வது யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம்15 ஆம்தேதி
தொடங்கி நடைபெற்று வருகின்றது.முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள திருக்கோவில் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த 28 யானைகள் புத்துணர்வு பெற்று வருகின்றன
முகாமில் கலந்து கொண்ட
யானைகளுக்கு அதன் வயது எடைக்கு ஏற்றாற்போல் காலை மாலை 2 வேளையும்
நடைப்பயிற்சி அளிக்கப்படுகின்றது.குளியல் மேடை மற்றும் ஷவர் மேடைகளில் யானைகள் குளிக்க வைக்கப்படுகின்றன. அதன் பின்னர் யானைகளுக்கு சமச்சீர் உணவு பசுந்தீவனங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மருத்துவ குழுவினர் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்து வருகிறனர். அதனைத் தொடர்ந்து யானைகளுக்கு பகல் நேரத்தில்ஓய்வு அளிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் முகாமில் கலந்துகொண்ட யானைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச்
சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறப்புப்பெற்று விளங்குகிறது.திருவண்ணாமலை மாவட்டம் போளூர்வட்டம் படவேடு
அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோவில் இணைந்த அருள்மிகு யோக ராமச்சந்திரா சுவாமி திருக்கோவில்
யானை லட்சுமி குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டது. யானையின் அருகில் பாகன் குழந்தைகளை கொண்டு சென்றால் தும்பிக்கையால் குழந்தையை ஆரத்தழுவி மகிழ்ச்சி அடைவதை நம்மால் காணமுடிகின்றது.மேலும் பாகன் ரங்கனின்
அன்பு கட்டளைக்கேற்ப தும்பிக்கையால் மவுத் ஆர்கன்
வாசித்தும் சலங்கைமணி அடித்தும்
எதிரிகளோடு சண்டையிடுவது
போல் ஆவேசமாக கம்பு சுழற்றியும் அசத்துகிறது.
பார்வையாளர்கள்
யானை லட்சுமியின் விளையாட்டுக்களைக்கண்டு மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்...

         Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.