ETV Bharat / state

தோட்டத்தில் நுழைந்த ஒற்றை யானை - அச்சத்தில் பொதுமக்கள் - Elephant entered a farmer garden

கோவை: தொண்டாமுத்தூர் அருகே விவசாயத் தோட்டத்தில் நுழைந்த ஒற்றை யானையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பாதுகாப்பிற்காக விடிய விடிய தோட்டத்தில் தீ மூட்டினர்.

elephant
elephant
author img

By

Published : Feb 4, 2020, 11:34 PM IST

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு யானை, புலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இதில் அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் யானைகள் நீர் மற்றும் உணவு தேடி மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்து விவசாயப் பயிர்களை தின்று நாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை நரசிபுரம் ஓடை காட்டில் உள்ள விவசாயி ஆறுச்சாமி என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்தது. தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளத்தை தின்று நாசம் செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுச்சாமி பாதுகாப்பிற்காக தோட்டத்தில் விடிய விடிய தீ மூட்டினார். பின்னர் யானை அங்கே விடியும் வரை நின்று கொண்டு இருந்தது. இது குறித்து அப்பகுதியினர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தோட்டத்தில் முகாமிட்டு இருந்த யானையைப் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

தோட்டத்தில் நுழைந்த ஒற்றை யானை

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், 'மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து விவசாயப் பயிர்களை நாசம் செய்து வருகிறது. எனவே, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க : அச்சுறுத்திவரும் புலியின் காணொலி கேமராவில் பதிவு!

Intro:கோவை அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை விடிய விடிய பயிர்களை சேதப்படுத்தியது.வீட்டின் முன்பு யானை வந்ததால் தீ மூட்டி பாதுகாப்பாக இருந்த விவசாயிகள்..Body:கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதி வெள்ளியங்கிரி மலை சாரலில் அமைந்துள்ளது. இங்கு யானை,புலி,காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.இதில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.மேலும் தற்போது வனப்பகுதியில
போதுமான தண்ணீர் மற்றும் உணவு இல்லாததால் யானைகள் வனத்தில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறி அருகில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே நேற்று இரவு வனத்தில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை
நரசிபுரம் ஓடைகாட்டு தோட்டம் பகுதியில் உள்ள விவாசாயி ஆறுசாமி என்பவர் தோட்டத்தில் புகுந்து அங்கு இருந்த மக்காச்சோள பயிரை சேதப்படுத்தியது.மேலும் காலை 7 மணி அளவில் ஆறுச்சாமி வீட்டின் முன்பு வந்த யானை அங்கிருந்த சோளத்தை சாப்பிட்டபடி நின்றது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தீ மூட்டி பாதுகாப்பில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் யானை வெளியே செல்லாததால் அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தோட்டங்களில் பயிரிடப்பட்டு உள்ள வாழை தென்னை போன்ற பயிர்களை சேதப்படுத்துவதாகவும், வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியே வந்தவுடன் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.