ETV Bharat / state

கோவையில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த யானை! - Elephant kills train

கோவை: தமிழ்நாடு - கேரளா எல்லையில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஆண் யானை உயிரிழந்தது. நான்கு மாதங்களில் இரண்டு யானைகள் ரயில்களில் மோதி உயிரிழந்திருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

accident
accident
author img

By

Published : Dec 25, 2019, 3:21 PM IST

கோவையிலிருந்து பாலக்காடு வரை செல்லக்கூடிய ரயில் பாதை சுமார் 24 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் வன விலங்குகள் தண்டவாளத்தைக் கடக்கும் என்பதால் ரயில்கள் மிகக்குறைந்த வேகத்தில் மட்டுமே செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும், குறிப்பிட்ட நேரங்களைத் தவிர அனைத்து ரயில்களும் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறிவந்தனர். கடந்த 17 ஆண்டுகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததால், கேரள மாநிலம் கஞ்சிகோடு வரை 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டுவந்தன.

ரயில்மோதி உயிரிழந்த யானை

இந்நிலையில், நேற்று இரவு தமிழ்நாடு - கேரள எல்லையான ஆரங்கோட்டுகுளம்பு என்ற இடத்தில் இரவு 12.30 மணி அளவில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளது. அப்போது கேரளாவிலிருந்து அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில், யானை மீது மோதியது. இதில் யானை சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு துடிதுடித்து உயிரிழந்தது.

நான்கு மாதத்தில் இரண்டு யானைகள் உயிரிழப்பு

சம்பவம் நடந்த இடம் வனப்பகுதி என்பதால் இரவு செல்லாமல் காலையில் சென்று கேரள வனத்துறையினர், ரயில்வேத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி கேரளாவிலிருந்து வந்த ரயில் மோதி இப்பகுதியில் 10 வயதுள்ள ஆண் யானை உயிரிழந்துள்ள நிலையில், மீண்டும் அதே பகுதியில் ரயில் மோதி மற்றொரு யானை உயிரிழந்துள்ளது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

17 ஆண்டுகளில் 28 யானைகள் உயிரிழப்பு

இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், கோவையிலிருந்து பாலக்காடு வரை உள்ள வனப்பகுதி யானைகள் காப்பகமாக உள்ளதாகவும், 2002ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 28 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர். ரயில் ஓட்டுநர்கள் மித வேகத்தைக் கடைப்பிடிப்பதில்லை எனவும், இதனால் வன விலங்குகள் அடிபட்டு இறப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க: உயிரிழந்த குட்டி யானை... மீட்க போராடும் தாய்... நெகிழ்ந்த மக்கள்...!

Intro:தமிழக கேரளா எல்லையில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஆண் யானை உயிரிழப்பு நான்கு மாதங்களில் இரண்டு யானைகள் ரயில்கள் மோதி உயிரிழப்புBody:கோவையிலிருந்து பாலக்காடு வரை செல்லக்கூடிய இரயில் பாதை அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. சுமார் 24 கிலோ மீட்டர் வனப்பகுதியில் இரயில் பாதை உள்ளது. எப்போது வேண்டுமானாலும் வன விலங்குகள் இரயில் பாதையைக் கடக்கும் என்பதால் இரயில்கள் மிகக் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், குறிப்பிட்ட நேரங்களைத் தவிர அனைத்து இரயில்களும் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். கடந்த 17 ஆண்டுகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததால் கேரள மாநிலம் கஞ்சி கோடு வரை 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு தமிழ்நாடு-கேரள எல்லையான ஆரங்கோட்டுகுளம்பு என்ற இடத்தில் இரவு 12.30 மணி அளவில் 20 வயது மதிக்கத் தக்க ஆண் யானை இரயில் பாதையை கடந்துள்ளது அப்போது கேரளாவில் இருந்து அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் இரயில் யானை மீது மோதியது.இதில் யானை சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது.இந்த விபத்தில் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.இதனையடுத்து இரயில் ஓட்டுனர் பாலக்காடு இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சென்றனர்.சம்பவ நடந்த இடம் வனப்பகுதி என்பதால் காலையில் கேரள வனத்துறையினர் மற்றும் இரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த ஆண் யானைக்கு 20 வயது இருக்கலாம் என்றும்,இரயில் வேகமாக வந்ததா என்றும் விசாரணை மேற்கொண்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி கேரளாவில் இருந்து வந்த இரயில் மோதி இப்பகுதியில் 10 வயதுள்ள ஆண் யானை உயிரிழந்துள்ள நிலையில் மீண்டும் அதே பகுதியில் இரயில் மோதி மற்றொரு யானை உயிரிழந்துள்ளது விலங்கு நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், கோவையிலிருந்து பாலக்காடு வரை உள்ள வனப்பகுதி யானைகள் காப்பகமாக உள்ளதாகவும், கடந்த 2002ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 28 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், ரயில்கள் கேரளாவிலிருந்து வரும் போது ரயில் ஓட்டுநர்கள் மித வேகத்தைக் கடைப்பிடிப்பதில்லை எனவும், இதனால் வன விலங்குகள் அடிபட்டு இறப்பதாகவும் குற்றம் சாட்டினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.