பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் புலி,யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதனால் இந்த இடம் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
தீபாவளியை ஒட்டி தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிறமாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்திருந்தனர். இந்நிலையில் டாப்சிலிப் பகுதியிலிருந்து பரம்பிக்குளம் செல்லும் பகுதியில் காட்டு யானைகள் சாலை கடந்தது. இதனைப்பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும், சேத்துமடை அடர் வனப்பகுதியிலிருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி சாலையை கடந்து அருகிலுள்ள விளை நிலங்களில் புகுந்தது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவலளித்தனர். தகவலையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு வனத்துறையினர் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதையும் படிங்க : சுஜித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!