கோவை மாவட்டம் பன்னிமடை சஞ்சீவி நகரில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவரது வீட்டில் தாங்களாகவே மின் இணைப்பை எடுத்து வீட்டின் முன்கேட் பகுதியில் மின்விளக்கு ஒன்றை பொருத்தியுள்ளனர். பின்னர், அதனைக் கழட்டி முன் பக்க கேட்டின் அருகிலேயே போட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவர்கள் தூக்கிப்போட்ட மின் ஒயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதை ரவிக்குமார் குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இதற்கிடையே ரவிக்குமார் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் துர்க்கையம்மாள் மின் ஒயர் கிடப்பதை கவனிக்கால் கேட்டை திறக்க முற்பட்டுள்ளார்.
அப்போது, மின்சாரம் தாக்கியதில் அவர் போட்ட சத்தம் கேட்டு, அவரைக் காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள் இருந்த ரவிக்குமார் ஓடிவந்துள்ளார். ஆனால், இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். பின்னர், இருவரது உடலும் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லபட்டது. இச்சம்பவம் தொடர்பாக சின்னதடாகம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தியவர் கைது!