கரூர் மாவட்ட பேருந்து பாடி கட்டும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவிக்கும் விழா கோவையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று நகரங்களில் முதல் கட்டமாக மின்சார பேருந்துகள் இயக்கப்படும். தற்போது தனியார் பேருந்துக்கு இணையாக அரசு சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் சொகுசுப் பேருந்துகள் விடுமுறை நாட்களில் கட்டண குறைப்பால் பயணிகளை கவர்ந்து வருகின்றன.
அதேபோல, அரசுப் பேருந்துகளிலும் விரைவில் கட்டண குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பேருந்துகளை தற்போது சோதனை அடிப்படையில் இரண்டு கழிப்பறை கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. அதனால் 40 பேருந்துகளை இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.