கோவை மாவட்டம் கரடிமலை அருகே நிவாரண பொருள்களை வழங்கிவிட்டு திரும்பிய மினி டோர் ஆட்டோ ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகளின் மீது மோதியது.
இதில் மாரியம்மாள் என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கருப்பி என்ற மற்றொரு மூதாட்டி படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய ஆட்டோவை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் காவல் துறையினர், ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பார்க்க: விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்திருக்கிறார் - ஆர்.கே. செல்வமணி