பொள்ளாச்சி நெகமம் அருகேயுள்ள தாசநாயக்கன்பாளையம் காத்தாடி காடு பகுதியில், சேவல்களை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக, நெகமம் காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில், நெகமம் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்,24, ரமேஷ், 34, அங்கமுத்து, 38, மொகவனூர் மணிகண்டன், 36, சுல்தான்பேட்டை வடிவேல், 26, ஜக்கார்பாளையம் கிட்டுசாமி, 55, எஸ்.குமாரபாளையம் திருமலைசாமி, 35, மெட்டுவாவி செந்தில்குமார், 35 உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்கள், ரூ.20 ஆயிரத்து 410 ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.