கோவை மாவட்டம் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகத்தில் மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும் ஊழியர்களின் கோரிக்கையை செவிகொடுத்து கேட்காத மின் வாரிய தலைவரைக் கண்டித்தும் மின் வாரியத்தில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை ஐஐடி படித்த மாணவர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருநாள் வேலைநிறுத்தம்
இந்தக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று ஒருநாள் முழுக்க எவ்வித வேலையிலும் ஈடுபடாமல் இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு உடனடியாகத் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் காத்திருப்புப் போராட்டம் நடைபெறுவதால், அப்பகுதியில் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 10 விழுக்காடு போனஸ்: மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்