கோவை: கோவை விமான நிலையத்தில் இன்று(ஜன.2) காலை ஏர் அரேபியா விமானம் ஒன்று ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு கழுகுகள் விமானத்தின் இடது புற இன்ஜின் பகுதியில் மோதியதாகத் தெரிகிறது. இதையடுத்து விமானம் உடனடியாக கோவை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் மேற்கொண்ட 164 பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர்.
விமான இன்ஜின் பகுதியில் முழுவதும் ஆய்வு மேற்கொண்ட பிறகே விமானம் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் சிலர் தங்களது பயணத்தை ரத்து செய்தனர். சிலர் அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். சில பயணிகள் கனெக்ட்டிங் விமானங்கள் மூலம் பயணம் மேற்கொண்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் பறவைகள் மோதிய பகுதியில் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தையும் சரிசெய்த பின்னரே விமானம் புறப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Chennai Metro Rail: 2022-ல் மெட்ரோ பயனர்கள் எவ்வளவு தெரியுமா.?