ETV Bharat / state

கோவையில் கனமழை - மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு! - tree fell down

கோவை: நான்கு நாட்களுக்கும் மேலாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்துள்ளன, இதனை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை
author img

By

Published : Aug 10, 2019, 9:22 PM IST

கோவையில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகனங்களை கடும் சிரமத்திற்கு இடையே இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையின் முக்கிய பகுதியான ப்ரூக் ஃபீல்ட் சாலையின் நடுவே மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று இதில் சேதமடைந்தது.

கோவையில் கனமழை - மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

மரத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ப்ரூக் ஃபீல்ட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது. இதனை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டனர். மழையின் தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Intro:மழையின் காரணமாக கோவை புரூக்பீல்ட்டு சாலையில் வாகனங்களின் மேல் மரம் விழுந்ததுBody:கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்துள்ளன இதனை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகனங்களை கடும் சிரமத்திற்கு இடையே இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பணிக்கு செல்பவர்கள் மலையின் தாக்கத்திற்கு இடையே பயணிக்க வேண்டிய நிலை கோவை மாவட்டத்தில் உருவாகியுள்ளது. இந்நிலையில் மழையின் தாக்கத்தால் கோவை ப்ரூக் பீல்ட் சாலையின் நடுவே மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று இதில் சேதமடைந்தது. தற்போது மரத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மழையின் தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.