தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்காக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தொகுதிகளுக்கு வாடகை வாகனங்களை அரசு அலுவலர்கள் பயன்படுத்தினர்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளுக்கு ரூ. 2 ஆயிரத்து 200, வால்பாறை தொகுதிக்கு ரூ. 2 ஆயிரத்து 500 என்ற கட்டண அடிப்படையில் வாகனங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக கடந்த மார்ச் 19ஆம் தேதி, ஆட்சியர் ராஜாமணி உத்தரவின்பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் பணிக்காக இயக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கான வாடகை, ஓட்டுநர் ஊதியம் ஆகியவற்றை விரைந்து வழங்குமாறு சார் ஆட்சியரிடம், ஓட்டுநர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க: நகரப் பேருந்துகளில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்