நடிகர் விவேக்கின் மறைவிற்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோயம்புத்தூரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மறைந்த திரைப்பட நடிகர் விவேக் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில், "நடிகர் விவேக் தன்னுடைய திரைப்படங்கள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய நகைச்சுவை மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்த நடிகர் விவேக்கின் திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர் மறைந்தாலும், பொதுமக்களுக்கு தெரிவித்த கருத்துகள் என்றும் மறையாது. தமிழ்நாடு மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் மனிதராக திகழ்ந்தவர் நடிகர் விவேக்" எனப் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: நடிகர் விவேக் மறைவு: சோகத்தில் மூழ்கிய சொந்த கிராம மக்கள்