ETV Bharat / state

'கலைஞரின் கடைசி ஆசையை நிறைவேற்றாமல் இருந்திருந்தால் இறந்திருப்பேன்..!' - ஸ்டாலின் உருக்கம்

கோவை: "அண்ணாவின் அருகில் அடக்கம் செய்ய வேண்டும் எனும் கலைஞரின் கடைசி ஆசையை நிறைவேற்றாமல் இருந்திருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்" என்று, திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்தார்.

ஸ்டாலின் பரப்புரை
author img

By

Published : May 6, 2019, 6:25 AM IST

சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று மாலை பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மோடி ஆட்சியில் கடுமையாக உயர்ந்துள்ளது. இவை அனைத்தும் குறைக்கப்படும் என்று திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கின்றோம். மோடியை வீட்டிற்கு அனுப்ப ஓட்டுப்போட்டதை போல எடப்பாடி வீட்டிற்கு போக இந்த தேர்தலில் வாக்களியுங்கள். தற்போது நடைபெறும் இந்த ஆட்சி மைனாரிட்டி ஆட்சி.

கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடுக்கும்படி, வெட்கத்தை விட்டு எடப்பாடி பழனிசாமியின் கையைப் பிடித்து கெஞ்சி கேட்டும் மறுத்து விட்டார். நீதிமன்ற அனுமதி பெற்று கலைஞருக்கு நினைவிடம் அமைத்தோம். அண்ணாவின் அருகில் கலைஞரை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கலைஞரின் கடைசி ஆசை நிறைவேறாமல் இருந்திருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்", என்று உருக்கமாக பேசி முடித்தார்.

சு.சீனிவாசன்.     கோவை

அண்ணாவின் அருகில்  அடக்கம் செய்ய வேண்டும் என்ற  கலைஞரின் ஆசையை நிறைவேற்றாமல்  இருந்திருந்தால் 
நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என திமுக தலைவர்  ஸ்டாலின் சூலூரில்  பிரச்சாரத்தின்  உருக்கமாக தெரிவித்தார்.

சூலூர் பேருந்து நிலையம் முன்பாக , சூலூர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின், இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது
சூலூருக்கு வந்தால் மறைந்த முன்னாள் திமுக  சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நினைவுக்கு வருகின்றார் எனவும்,
சூலூருக்கு சிறுவாணி குடிநீர் திட்டம் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் பொன்முடி எனவும் தெரிவித்தார்.
அந்த சிறுவாணி தண்ணீர் முழுமையான அளவு  இன்னமும் மக்களுக்கு கிடைக்க வில்லை எனவும், பொங்கலூர் பழனிச்சாமி தேர்வு பெற்ற பின்  முழுமையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு விலை மோடி ஆட்சியில் கடுமையாக  உயர்ந்துள்ளது என தெரிவித்த அவர்,
இவை அனைத்தும் குறைக்கப்படும் என திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

சீரியல் பார்க்காமல் தியாகம் செய்துவிட்டு எங்களை பார்க்க மக்கள் வந்துள்ளீர்கள், டி.வியில் பார்த்தால் ஓரளவு நல்லா இருக்காரே, நேராக பார்த்தால் எப்படி இருப்பார் என பார்க்க வந்திருக்கின்றீர்கள் என தெரிவித்த அவர்,
வீடுகளில் 300 ரூபாய் கேபிள் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது, திமுக ஆட்சிக்கு வந்தால் கேபிள் கட்டணம் 100 ஆக குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தீரன் சின்னமலையின் தளபதியாக இருந்த அருந்ததி சமூகத்தை சேர்ந்த பொல்லானுக்கு சிலை வைக்கப்படும், மணி மண்டபம் கட்டப்படும் என உறுதியளித்த ஸ்டாலின்,
மோடியை வீட்டிற்கு அனுப்ப ஓட்டுப்போட்டதை போல எடப்பாடி வீட்டிற்கு போக இந்த தேர்தலில் வாக்களியுங்கள் என தெரிவித்தார். தற்போது நடைபெறும் இந்த ஆட்சி மைனாரிட்டி ஆட்சி என கூறிய அவர்,கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடுக்க இந்த ஆட்சியாளர்கள்  மறுத்தார்கள்  எனவும் , 
நீதி மன்ற அனுமதி பெற்று கலைஞருக்கு நினைவிடம் அமைத்தோம் எனவும் தெரிவித்தார். அண்ணாவின் அருகில் கலைஞரை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கலைஞரின் கடைசி ஆசை நிறைவேறாமல்  இருந்திருந்தால் 
நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் எனவும் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் உருக்கமாக பேசினார்..

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.