கோயம்புத்தூர் காரமடை பகுதியை சேர்ந்த சித்ரா (20) மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு ஆட்டோவில் பெட்ரோல் கேனுடன் வந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பாதுகாப்பு காவலர்கள் ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் இருந்த பெட்ரோல் கேனை கைப்பற்றி, அந்தப் பெண்ணை காவலர் வாகனத்தில் ஏற்றி காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சித்ராவிற்கும் கெளரி சங்கர் என்பவருக்கும் கடந்த மூன்று மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் வரதட்சணை கேட்டு கெளரி சங்கர் சித்ராவை அடித்து துன்புறுத்தியதாக தெரியவந்துள்ளது.
வரதட்சணை கொடுமையை கண்டித்து கோயம்புத்தூரில் சில தினங்களுக்கு முன் போஸ்டர் ஒட்டிவந்த நிலையில், தற்போது இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை: ஆட்சியர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண் - வன்கொடுமை
கோயம்புத்தூர்: வரதட்சணை கொடுமைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார்.