ETV Bharat / state

"வதந்திகளை நம்பாதீர்" - இந்தியில் அறிக்கை வெளியிட்ட கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள்!

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம் என கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் இந்தி மொழியில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

author img

By

Published : Mar 4, 2023, 12:45 PM IST

Updated : Mar 4, 2023, 9:52 PM IST

Etv Bharat
Etv Bharat

கோவை: சமீப நாட்களாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப்படுவதாக பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. அதே சமயம் சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் வட மாநில தொழிலாளர்கள், தமிழர்களை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ மிகவும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இருவேறு இடங்களில் பீகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோக்களின் விவகாரம் தமிழ்நாட்டை தாண்டி பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பயங்கர பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் அவர்களது குடும்பங்களுடன் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதாகவும், இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி இருப்பதாக நேற்று(மார்ச்.3) தென்னிந்திய நூற்பாலை சங்கத்தினர் செய்தியாளர்களிடத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

அதே சமயம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் நிறுவனத்தினர், வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்வதால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களது பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் மனு அளித்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இந்தி மொழியில் அறிக்கை ஒன்றை இன்று (மார்ச்.4) வெளியிட்டுள்ளார். அதில், "கோவை மாவட்டத்தில் அனைத்து மாநிலத்தினரும் மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, வதந்தியாக பரவும் வீடியோக்களை பிற மாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

"வதந்திகளை நம்பாதீர்கள்" - இந்தியில் அறிக்கை வெளியிட்ட கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள்!

இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம்" - வடமாநில தொழிலாளர்கள் பேசிய வீடியோ வைரல்!

இதேபோல, நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், இந்தி மொழியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திருப்பூரில் அனைத்து தொழில்துறை தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் அனைத்து தொழில் துறை தொழிலாளர்களின் அச்சத்தை போக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இது போன்று வெளியாகி வரும் எவ்விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

வதந்தி ஏற்படுத்திய 2 பேருக்கு சிறை: மேலும் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோர், "திருப்பூர் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் வதந்தியாக பரப்பிய வீடியோவிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இரு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்தனர்.

இதுபோன்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வடமாநில தொழிலாளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர். தற்போது கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் இது குறித்து அதிகளவு பேசப்பட்டு வருகிறது.

பீகார் குழு தமிழ்நாடு வருகை: இந்நிலையில், வட மாநில தொழிலாளர்களின் நிலை பற்றி ஆய்வு செய்ய தமிழ்நாட்டிற்கு 4 பேர் கொண்ட குழுவினரை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அனுப்பியுள்ளார். இன்று மாலைக்குள் தமிழ்நாடு வந்தடையும் அக்குழு இங்குள்ள தொழிலாளர்களின் நிலை, பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: கிருஷ்ணகிரி எஸ்பி!

Last Updated : Mar 4, 2023, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.