கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர். கடந்த இரு நாள்களாகத் தடுப்பூசி மருந்து போதிய கையிருப்பு இல்லாததால், ஊசி போடும் பணிகள் சுணக்கமாக இருந்தன.
இந்நிலையில் மத்தியத் தொகுப்பிலிருந்து 48 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தடைந்த நிலையில் இன்றுமுதல் தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
இதையடுத்து, கோவை குறிச்சி பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (ஜூன் 4) நடைபெற்றது. காலை முதலே 150-க்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த திமுகவினர், தடுப்பூசி போடுவதற்கான டோக்கன்களை தாங்கள்தான் விநியோகம் செய்வோம் எனக் கூறி மருத்துவக் குழுவினரிடமும், மருத்துவர் முகுந்தன் என்பவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் திமுகவினரை வெளியேற்றினர். இதனால் தடுப்பூசி போடும் பணி சிறிது நேரம் தடைப்பட்டது. பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
பின்னர், அந்தத் தடுப்பூசி மையத்திற்கு வந்த கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வம், பணியில் இருந்த மருத்துவர் முகுந்தனிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: கோபியில் கரோனா பேரிடர் உதவி மையம் தொடக்கம்