கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த வைகோ, '' இலங்கையில் தமிழர்களுக்கு இடிமேல் இடியாக அடிவிழுகிறது. லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, பெண்களை வன்கொடுமை செய்த ராஜபக்சவின் அரசுக்கு, பயங்கரவாதிகளை எதிர்கொள்ள 350 கோடி ரூபாயும் பொருளாதார வளர்ச்சிக்கு 2800 கோடி ரூபாயும் தர போகிறோம் என்று மோடி சொல்லியிருக்கிறார்.
மொழி, இனம், இரத்தப் பந்தத்தால் பின்னப்பட்டு வருபவர்கள் தமிழக மக்கள் நாங்கள் தான். வரலாறு தெரியாமல் இலங்கை அரசுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார் மோடி. கொலைகாரப்பாவிக்கு பட்டம் கொடுத்து, பரிசு கொடுத்திருக்கிறார்கள்.
கொலைகார கோத்தபாய ராஜபக்சவுடன் கை குலுக்குவதற்காக , ஈழத் தமிழர்களின் உணர்வுகளைக் காவு கொடுத்திருக்கிறார் மோடி. இது தாங்கமுடியாத அதிர்ச்சியை ஏற்படுத்திருயிருக்கிறது. கோத்தபய ராஜபக்ச ஏமாற்றுவதற்காக படகுகளை விடுவிக்கிறேன் என்று சொல்கிறார்.
ஆனால், லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்ததற்கு என்ன நீதி இருக்கிறது" என கேள்வி எழுப்பினார். மேலும் இரக்கமற்றவரும், இதயமில்லாதவருமான மோடிக்கு மதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறேன் என்றும் வைகோ ஆவேசமாகக் கூறினார்.
இதையும் படிங்க : உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக எளிதில் வெற்றி பெறும்: ராஜன் செல்லப்பா பேட்டி