ETV Bharat / state

ஆட்கடத்தல்காரர்களுக்கு திமுகவினர் மறைமுகமாக உதவுகிறார்கள் - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

கோவை அட்டுக்கல் விவகாரத்தில் ஆட்கடத்தல்காரர்களுக்கு திமுகவினர் மறைமுகமாக உதவுகின்றனர் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

author img

By

Published : Aug 2, 2022, 10:57 PM IST

Etv Bharatஆட்கடத்தல் காரர்களுக்கு திமுகவினர் மறைமுகமாக உதவுகிறார்கள் - வானதி சீனிவாசன்

கோவை: காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

’75ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைவரது இல்லங்களிலும் தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசியக்கொடி ஏற்றுவது இறக்குவது போன்றவற்றில் விதிமுறைகளுக்கு உட்பட்டு சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து துணிகளிலும் தேசியக்கொடியைத்தயாரிக்கலாம். மாலை 6:00 மணிக்கு மேல் தேசியக்கொடியை பறக்க விடலாம்.

தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பங்களின் மேல் எவ்வித சின்னங்களும் இருக்கக்கூடாது போன்ற திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். மத்திய அரசின் ஜெம் வெப்சைட்டிலும் 2 கோடி தேசியக்கொடிகளுக்கு ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திலும் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு பாஜக சார்பில் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கோவை தெற்கு சட்டப்பேரவை அலுவலகத்திலும் தேசியக்கொடியை விற்பனை செய்வதற்கு கவுன்ட்டர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவசமாக இல்லாமல் விருப்பமுள்ள பணத்தைச்செலுத்தி விட்டு தேசியக்கொடியை பெற்றுக்கொள்ளும்படி ஏற்பாடுகள் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் ஒரு கோடி தேசியக்கொடியை ஏற்றுவதற்கு பாஜக சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆண்கள் சார்பில் இருசக்கர வாகன பேரணியும், பெண்கள் சார்பில் வந்தே மாதரம் பேரணியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அட்டுக்கல் பகுதியில் ஆதரவற்றவர்களுக்காக இல்லம் நடத்துகிறோம் என்ற பெயரில் நல்ல மன நிலையில் உள்ளவர்களையும் வாகனத்தில் ஏற்றிச்சென்று மொட்டை அடித்து சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளனர். பாஜகவினர் இது குறித்து விசாரித்தபொழுது அந்த கட்டடம் சீல் வைக்கப்பட்ட கட்டடம் எனத்தெரிய வந்தது. அதனைத்திறப்பதற்கு திமுக நிர்வாகிகள் உதவியிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது. இப்பிரச்னைக்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் எங்களின் பயம்.

இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மனிதக் கடத்தல் நிறுவனங்களுக்கு மறைமுகமாக திமுக நிர்வாகிகள் உதவுகிறார்கள். அந்நிறுவனத்தினரை கண்டுபிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இப்பிரச்னையை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த முதலமைச்சர் உத்தரவிட வேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம் என பிரதமரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன என்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, 'அந்தப் போஸ்டரில் என்ன தப்பு இருக்கிறது' எனப் பதில் அளித்தார். ’தேசியக் கொடியை கோயில்கள், கல்வி நிறுவனங்களிலும் ஏற்றலாம். திமுக, காங்கிரஸ் ஆகிய அனைத்துக்கட்சி கொடிக்கம்பங்களிலும் சட்டத்திருத்தங்களுக்கு உட்பட்டு ஏற்றலாம்.

ஆட்கடத்தல்காரர்களுக்கு திமுகவினர் மறைமுகமாக உதவுகிறார்கள் - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து ஒவ்வொரு முறையும் நான் பேசி வருகிறேன். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஒவ்வொரு முறையும் கோவைக்காக 200 கோடி ரூபாய் உள்ளது எனக்கூறுகிறார். அது என்ன ஆனது? அந்த 200 கோடி ரூபாய் கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி போல உள்ளது. கோவை மாநகராட்சியில் மேயர் துணை மேயர் ஆகியோர் பொறுப்பேற்றபிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லை’ என்றார்.

அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் குளங்களின் பரப்பளவு ஆகியவை குறைக்கப்பட்டுள்ளதாகவும், நீர் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருவதற்கு அவர் ’அவ்வாறு பாதிப்பு ஏற்படுமானால் அது குறித்து மாநில அரசிடமும் மத்திய அரசிடமும் பேசுகிறேன்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வைரல் போஸ்டர் - தமிழ்நாட்டில் பிரதமரின் சதுரங்க வேட்டை ஆரம்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.