ETV Bharat / state

'திராவிட மாடலின் INDIA' - கோவையில் திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு! - மு க ஸ்டாலின்

எதிர்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி (INDIA) என பெயரிடப்பட்டதை தொடர்ந்து கோவையில் திமுக இளைஞரணியினர் INDIA குறித்து 20 அடி அகலம், 6 அடி உயரத்திற்கு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

kovai
கோவை
author img

By

Published : Jul 20, 2023, 10:38 AM IST

கோவை திமுக போஸ்டர்

கோயம்புத்தூர்: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் அமைக்க பல்வேறு எதிர்கட்சிகள் ஒரணியில் திரண்டு வருகின்றன. இதனிடையே, கடந்த ஜூன் 23ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் தலைமையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டாவது கட்ட எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி "INDIA" என பெயரிடப்பட்டது.

இந்த நிலையில், கோவையில் திமுக இளைஞரணியினர் INDIA குறித்து 20 அடி அகலம் 6 அடி உயரத்திற்கு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் "2024 திராவிட மாடலின் INDIA. பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல..." என்ற வாசகங்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை லங்கா கார்னர், கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

முன்னதாக, எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் முடிந்த மறுநாளில் 26 எதிர்கட்சிகள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக எதிர்கட்சிகள் புகார் அளித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சின்னங்கள் சட்டப் பிரிவின் கீழ் இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார்,

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு (என்சி), மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, சிவசேனா, சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம், அப்னா தளம், அகில இந்திய பார்வர்ட் பிளாக், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி (எம்எம்கே), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 26 கட்சிகள் மீது டெல்லி பரக்ஹம்பா காவல் நிலையத்தில் டாக்டர் அவினாஷ் மிஸ்ரா என்பவர் புகார் அளித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்து உள்ளது இந்தியக் குடிமகன் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அனைத்து இந்தியர்களின் மனதையும் புண்படுத்தி இருக்கும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் புகார்தாரர்களுக்கு அதிகபட்சம் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவில் நடந்த திருமணத்திற்கு ஆஸ்திரேலியாவில் விவாகரத்தா? - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.