கோவை மாவட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா. கார்த்திக் பொதுமக்களுடன் சென்று கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன் குமாரிடம் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், " கோவை மாநகராட்சி முழுவதும் 84க்கும் மேற்பட்ட இடங்களில் மயானங்கள் இருக்கின்றன.
அதில், பெரும்பாலானவை முட்புதர்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும், பல மயானங்களில், தண்ணீர் வசதி இல்லை. கோவை முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளன. சாக்கடைகள் அனைத்தும் துர்நாற்றம் வீசுகின்றன.
எனவே, மயானங்களைப் பராமரிக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். முறையான கால்வாய் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: நாய்களுக்குத் திருமணம் செய்து வைத்த பாரத் சேனா!