சாலையோரங்களிலோ, சாலைகளில் நடுவிலோ பேனர்கள் வைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், பேனர்கள் ஆங்காங்கே தலைதூக்கிக்கொண்டுதான் உள்ளன. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவினர் சாலையில் வைத்த பேனர் சரிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்தார். அப்போது, பேனர் கலாசாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த திமுகவே தற்பொழுது திமுக தலைவரின் பிறந்தநாளையொட்டி அக்கட்சியினர் பேனர்கள் வைத்துள்ளதால், பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதனால், நீதிமன்றத்திற்குள் செல்லும் மக்களின் மீதோ அல்லது வழக்கறிஞர்களின் மீதோ சாய்ந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதிமுகவினர் பேனர்கள் வைக்கும்போது அதற்கு எதிராகப் போராடிய திமுகவினரே தற்போது அவர்களின் தலைவரின் பிறந்தநாளுக்கு பொது இடங்களில் பேனர்கள் வைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அசைவம் உண்போம்! குணத்தால் ஒருவர் என்போம்!' - ஸ்டாலின் பிறந்தநாள்