ETV Bharat / state

திமுக தேர்தல் அறிக்கை: பரப்புரையை தொடங்கிய நெசவாளர் அணி செயலாளர் - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்

திமுக அறிவித்துள்ள திட்டங்களை நெசவாளர் குடும்பங்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் பரப்புரையை மாநில நெசவாளர் அணி செயலாளர் கே.எம். நாகராஜன் தொடங்கிவைத்தார்.

மாநில நெசவாளர் அணி செயலாளர் கே .எம். நாகராஜன்

author img

By

Published : Mar 21, 2021, 12:09 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த குள்ளக்காபாளையம் ஊராட்சியில் திமுக மாநில நெசவாளர் அணி சார்பில் அதன் செயலாளர் கே.எம். நாகராஜன் கலைஞரின் நினைவிடத்திலிருந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ”திமுக ஆட்சிக் காலத்தில் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளையும், வாழ்வாதாரம் உயர செயல்படுத்த திட்டங்களையும், நெசவாளர்களுக்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம்.

மேலும் வருகின்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியில் நெசவாளர்களுக்கான தனி கூட்டுறவு சங்கம் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், நூல் கொள்முதல் நிலையம் போன்ற திட்டங்களை கிராமம் கிராமமாக சென்று நெசவாளர் குடும்பத்தினரிடம் எடுத்துரைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மாநில நெசவாளர் அணி செயலாளர் கே .எம். நாகராஜன்

உடன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி திமுக சட்டப்பேரவை வேட்பாளர் டாக்டர் வரதராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சந்தேகமிருந்தால் எனக்கு ஓட்டு போடாதீர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.